உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக கமல் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.