வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது!

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com