யாழில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று(புதன்கிழமை) அதிகாலை மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், மந்திகை ஆதார மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மந்திகை ஆதார மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட வல்வெட்டித்துறையைச் சேரந்த 72 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை திக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 56 வயதுடைய பெண்ணின் சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com