சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிக்கை வெள்ளியன்று ஜனாதிபதியிடம கையளிக்கப்படும்!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார அமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளது.

இதனை அடுத்து வெள்ளிக்கிழமை (17) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் கொரோனாதடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கு நேற்று முடிவு எட்டப்பட்டது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுக் குழுவுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com