கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 483 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 483 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 14 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 4 இலட்சத்து 85 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 296 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com