அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் – சபையில் சுமந்திரன்

அவசரகால நிலைமை பிரகடன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் ஜனாதிபதியால் அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வெளியிட்ட அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியால் அந்த அவசரகால சட்டங்கள் கொண்டுவரப்படும்போது நாடாளுமன்றத்தினால் அதனை கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் கபடமான எண்ணம் இருப்பது புலப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும் அவற்றினை இப்பிடியாக செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com