நிதி கிடைக்காமையால் உலருணவுப் பொதிகளை வழங்குவதில் நெருக்கடி – கிளிநொச்சி அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள கொவிட் – 19 தொற்றாளர்கள் காரணமாக அதிகளவான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசினால் 10 உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் அவற்றை தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதில்  நெருக்கடி  நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்டத்திலுள்ள கூட்டுவுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதிகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கு எமக்கு நிதி கிடைக்கவில்லை.

ஆனால் உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கான பட்டியல்கள் மாத்திரம் கிடைக்கப்பெற்று வருகின்றன.

மேலும் பொருட்களை வழங்குவதற்கான கூறுவிலை கோரல் எம்மிடம் பெறப்பட்டபோது காணப்பட்ட பொருட்களில் விலைகளில் தற்போது  இல்லை அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன. 

இந்தநிலையில்  நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றோம் எனக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்குவதற்காக நிதியினை  நாம் திறைசேரியிடம் கோரியுள்ளோம்.

எனவே நிதி கிடைத்ததும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com