
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாவிடின் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளார்கள். வியாபாரிகள் தன்னிச்சையான முறையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றமை அரசாங்கத்தின் பலவீனத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.