நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியில் விபத்து- இருவர் காயம்

நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியிலுள்ள தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த பகுதியிலுள்ள பிரதான வீதியில் பயணித்த பேருந்து, எதிரே வந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் லொறியின் சாரதியும் பேருந்தின் சாரதியும் காயமடைந்துள்ளதுடன் இன்று காலை, சுமார் 30 நிமிடங்கள் ஹற்றன் – நுவரெலியா வீதி ஊடான போக்குவரத்து இதனால் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கனரக வாகன சாரதியினால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனமையே விபத்துக்கு காரணமென பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com