பெரியகல்லாறு அரச வங்கி சேவைகள் தற்காலிக முடக்கம்!

பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள அரச வங்கிகளில் கடமைபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமைபரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வங்கி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரைதற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள அரச ,அரசசார்பற்ற நிறவனங்களில் கடமைபரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்ட்டுவருகின்றன.

கடந்தவாரம் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடமைபரியும் முகாமையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் அவ் அலுவலக நடவடிக்கைகள் 14 நாட்களுக்கு இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com