பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள இருக்கும் 12 போட்டியாளர்கள்!

சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.

முதல் சீசனில் துவங்கி நான்காவது சீசன் வரை TRP மூலம் பல சாதனைகளை பிக் பாஸ் நிகழ்ச்சி செய்துள்ளது.

ஆனால், முந்தைய சீசன்கள் போல் இல்லாமல், கடந்த பிக் பாஸ் சீசன் 4, மக்கள் மத்தியில் பெரிதளவில் ரீச் கிடைக்கவில்லை.

இதனால், பிக் பாஸ் சீசன் 5, மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச்சாக வேண்டும் என்று விஜய் டிவி குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் 8 நபர்களின் பெயர்கள் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது, அதில் கொஞ்சம் வேறுபட்டு, பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள இருக்கும் 12 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்..

1. குக் வித் கோமாளி கனி
2. பாபா பாஸ்கர்
3. நடிகை ரம்யா கிருஷ்ணன்
4. மைனா நந்தினி
5. ஜி.பி முத்து
6. எம்.எஸ். பாஸ்கர்
7. நடிகை ஷகீலாவின் மகள் மீலா
8. செய்தி வாசிப்பாளர் கண்மணி
9. லக்ஷ்மி ராமகிருஷ்னன்
10. ஜான் விஜய்
11. ஆதவ் கண்ணதாசன்
12. ப்ரதாயினி

இவர்களிடம் தான் தற்போது பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com