கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண் தனது 9 மாத குழந்தையுடன் சிசுவுடன் தப்பியோட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர், அவரது 9 மாத பெண் சிசுவையும் தூக்கிக்கொண்டு கேகாலை பொது வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

கேகாலை பொது வைத்தியசாலையில் 2ஆம் இலக்க விடுதிப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தபோதே அவர் தப்பிச் சென்றுள்ளார்.

பி.சி.ஆர். பரிசோதனைக்கு அமைவாக குறித்த பெண்ணுக்கும் அவரது 9 மாத சிசுவுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com