திருகோணமலையில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடமைக்காக இராணுவ வீரர் சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதிலேயே அவர் உயிரிழந்ததாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புலிகண்டிகுளம் கோமரங்கடவல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் திருகோணமலை வவுனியா வீதியில் இன்று (31) மாலை விபத்து இடம்பெற்றதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மகதில்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு இராணுவ வீரரைக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மகதிவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.