சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு -மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு ஒட்டன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பாலைமரத் தீராந்திகள் வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில் வனவளத்திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்று (31) மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளிலேயே குறித்த பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.