இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி பரிதாப மரணம்!

இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 28ம் திகதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் வைட் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் தோம்சன் றிவர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கையை சேர்ந்த அனுராத குடாகொட என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் இறுதி சடங்கு செலவுகளுக்காக நிதிசேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டு 14 ஆயிரம் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com