இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 16 இலட்சத்து 13 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் 4 இலட்சத்து 23 ஆயிரத்து 810 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 இலட்சத்து 8 ஆயிரத்து 920 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை இந்தியா  முழுவதும் 46 கோடியே 15 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.