கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (28) காலை பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியை சேர்ந்த 64 வயதான சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com