5 விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தம் ; வர்த்தமானியும் வெளியீடு

நாட்டில் ஐந்து விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று நேற்றிரவு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

  1. இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம்
  2. இலங்கை ஜூடோ சங்கம்
  3. இலங்கை ஸ்கிரப்பல் சம்மேளனம்
  4. இலங்கை சர்பிங் சம்மேளனம்
  5. இலங்கை ஜூஜிட்சு சம்மேளனம்

ஆகியவற்றின் பதவுகளே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் தற்காலிக செயலொழுங்காக அத் தேசிய விளையாட்டுச் சங்ங்களின் / சம்மேளனங்களின் நிர்வாகம் மற்றும் ஏனைய யாதெனும் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் ஏறபுடைய பதவிதாங்குநர் தேர்தல் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுப்பதற்கும் மற்றும் நடாத்துவதற்கும், அது வரையில் உகந்த விதமாக நிறைவேற்றுவதன் பொருட்டு 2021 ஜூலை 01 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் விதமாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான அமல் எதிரிசூரியவை உரிய அதிகாரம் பொருந்தியவராகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்துள்ளார்.