அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 : 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டடுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 5 போட்டிகள்  கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் ஆகிய இரு வகையான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது.

முதல் தொடராக நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 18 ஓட்டங்களாலும், இரண்டாவது போட்டியில் 56 ஓட்டங்களாலும், மூன்றாவது போட்டியில் 6 விக்கெட்டுக்களாலும் வெற்றியீட்டி  2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இவ்விரு அணிகளுக்கிடையிலான 4 ஆவது போட்டி இலங்கை நேரப்படி நாளைய தினம் அதிகாலை 5 மணிக்கும், 5 ஆவது போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கும் ஆரம்பமாகும்.