21 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானம்

நாட்டின் எந்த பகுதியிலும் துல் ஹஜ் மாத தலைப்பிறை தென்படாமையினால், எதிர்வரும் 21 ஆம் திகதி ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன்போது, துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால், துல்கஹ்தா மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து, துல்ஹஜ் மாதத்தை நாளை (12) முதல் ஆரம்பிக்க பிறைக்குழு தீர்மானித்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாட தீர்மானித்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com