புகையிரத சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம் – முழு விபரம் இதோ !

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய  எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புகையிரத சேவைகள்  மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மேல் மாகாணத்திறகுள் மாத்திரம்  34 புகையிரத சேவை  பயணங்கள் இடம்பெறும்.  

பொது பயணிகள் சமூக இடைவெளியை பேணுவது  கட்டாயமாகும் என புகையிரத நிலைய திணைக்களத்தின் பிரதி  பொது முகாமையாளர்  காமின செனரத் தெரிவித்தார்.

 புகையிரத சேவைகளை மீள ஆரம்பித்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  நாளை மறுதினம் காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளன.  

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புகையிரத போக்குவரத்து  சேவையை  திங்கட்கிழமை காலை முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புகையிரதங்கள்  பொது போக்குவரத்து  சேவையில் ஈடுப்படுத்தப்படும் காலை  17 புகையிரத சேவையும், மாலை 17 புகையிரத சேவையும்  திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும். 

இதற்கு மேலதிகமாக  போவத்தை  தொடக்கம் புத்தளம் வரையில் ஒரு புகையிரத சேவையும்,  பொல்காவெல தொடக்கம் மஹவ  வரை ஒரு புகையிரத சேவையும் ஈடுப்படுத்தப்படும்.

 அத்தியாவசிய சேவைகள்  மேல்மாகாணத்தை மையப்படுத்தியதாக காணப்படுவதால் முதற்கட்டமாக மேல்மாகாணத்திற்குள் மாத்திரம் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏகைய மாகாணங்களுக்கான புகையிரத சேவைகள் குறித்த பின்னர் அறிவிக்கப்படும்.

பொது பயணிகள் அநாவசியமான முறையில் புகையிரத போக்குவரத்து சேவையினை  பயன்படுத்தவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   அரச மற்றும் தனியார்  சேவையாளர்கள் தங்களின் நிறுவன பிரதானியிடமிருந்து கிடைக்கப் பெற்ற  சேவைக்கான அனுமதி பத்திரத்தை தம் வசம் வைத்திருப்பது  அவசிமாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு வகுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் புகையிரத சேவையில் கடுமையான முறையில்  செயற்படுத்தப்படும். 

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பொது பயணிகள் சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாகும்.என்றார்.