ரஞ்சனிடம் ஐந்து மணி நேரம் சிஐடி விசாரணை!

பௌத்தத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (22) குற்றவியல் புலனாய்வுத் துறையில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, அவர் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு வந்த அவர், மாலை 5.30 மணியளவில் புறப்பட்டார்.