டுபாயில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை எகிறியது!

இலங்கையில் இன்று (21) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கண்டறியப்பட்ட 17 பேரில் 15 பேர் டுபாயில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்பதும், இருவர் கடற்படையினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 432 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.