யுவதியை காப்பாற்ற முயன்ற இளைஞன் சடலமாக மீட்பு!

நுவரெலியா – மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள குதித்த யுவதியை காப்பாற்ற முயன்று காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரிஸ்வான் (32-வயது) இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற யுவதி காப்பாற்றப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சி ஈடுபட்ட ரிஸ்வான் 7 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.