நுவரெலியாவில் இதுவரை 4990 கொரோனா தொற்றாளர்கள்

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 4990 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். நிலையில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 49 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். 

நுவரெலியா மாவட்டத்தின் கொரேனா தொற்று தொடர்பாக இன்று (6.6.2021) காலை வெளியான அறிக்கையின்படி 4990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இவர்களில் 74 பேர் மரணமடைந்துள்ள நிலையில். 3643 குடும்பங்கள் தன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த  24 மணித்தியாலயத்தில் 49 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் 49 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அம்பகமுவ பகுதியில் 937 குடும்பங்களும், கொத்மலை பகுதியில் 784 குடும்பங்களும், ஹங்குரன்கெத்த பகுதியில் 210 குடும்பங்களும், வலப்பனை பகுதியில் 901 குடும்பங்களும், நுவரெலியாவில் 811 குடும்பங்களுமாக மொத்தமாக 3643 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரேனா தொற்று உறுதியானவர்களில் அதிகமானவர்கள் அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அம்பேகமுவ பகுதியில் 910 பேரும், பொகவந்தலாவ பகுதியில் 615 பேரும், ஹங்குரன்கெத்த பகுதியில் 383 பேரும், கொட்டகலை பகுதியில் 297 பேரும், கொத்மலையில் 417 பேரும், லிந்துலையில் 334 பேரும், மஸ்கெலியா 203 பேரும், மதுரட்ட பகுதியில் 122 பேரும், நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்டவர்களில் 361 பேரும், புதிய திஸ்பனை பகுதியில் 381 பேரும், நுவரெலியாவில் 363 பேரும், இராகலையில் 312 பேரும், வலப்பனை பகுதியில் 292 பேருமாக மொத்தமாக 4990 பேர் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். 

தொற்றாளர்கள் அதிகம் இனம் காணப்பட்ட பிரதேசமாக அம்பகமுவ பிரதேசம் காணப்படுகின்றது. இங்கு 910 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன். இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளதுடன். அதில் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

இது தவிர அம்பகமுவ பகுதியில் 27 பேரும், வலப்பனை பகுதியில் 11 பேரும், கொத்மலையில் 4 பேரும், ஹங்குரன் கெத்த பகுதியில் 2 பேருமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணித்தியாலத்தில் அதாவது இந்த அறிக்கை வெளியான (06.06.2021) இன்று காலை 10 மணி வரை புதிய திஸ்பனை பகுதியிலேயே அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 33 பேர் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.