சட்ட விரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து விற்றவர் கைது!

பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.   

நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி மதுபானங்களை விற்கும்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக  நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.