ஓட்டமாவடியில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண்ணொருவருக்கு தனது வீட்டில் வைத்து கடந்த 2 ஆம் திகதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நபரை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த நபருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனை தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவே முதல் கொரோனா மரணமாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மரணமடைந்த நபரின் மனைவியும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.