115 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம்

லண்டனில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையில் பிரமாண்ட நீச்சல் குளமொன்று நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 115 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம் தென்மேற்கு லண்டனின் வோக்ஸ்ஹால், நைன் எல்ம்ஸ் கட்டிடங்களுக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

25 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் 3 மீற்றம் ஆழம் கொண்ட வகையில் இந்த நீச்சல் குளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நகரத்தில் இரண்டு சொகுசு கோபுர தொகுதிகளின் 10 ஆவது மாடிக்கு இடையில் அமைந்துள்ள இந்த குளம் 400 டன் தண்ணீரை கொண்டுள்ளது.

லண்டனில் தற்போது அதிகளவான வெப்ப நிலை நிலவும் நிலையில் நீச்சல் குளமானது அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.