கனடாவிலிருந்தபடியே இந்திய நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் மருத்துவர்!

கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

குறிப்பாக கனடா வென்டிலேட்டர்கள் முதல் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், கனடாவில் வாழும் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகிறார்கள்.

கால்கரியில் வாழும் மருத்துவரான பவானி (Dr. Bhavini Gohel), இந்தியாவில் வாழும் தன் குடும்ப வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அப்படி தொடங்கியது, தற்போது பல மருத்துவர்கள் இணைந்து கனடாவில் இருந்தபடி, ஒன்லைனில் இந்திய நோயாளிகளுக்கு ஆலோசனைகளும் உதவிகளும் மட்டுமின்றி சிகிச்சைகளும் வழங்கி வருகிறார்கள்.

மருத்துவர் பவானியுடனான பேட்டி ஒன்று அடங்கிய வீடியோவை இங்கு காணலாம்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com