முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த 3 பொலிஸ் பிரிவுகளும் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை கொவிட் 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய  கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று மதியம்  தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்நிலையில் நாளை 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டுக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com