ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஆறு இலட்சத்து 461பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை ஏழு இலட்சத்து 95ஆயிரத்து 200பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 28ஆயிரத்து 970பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 416பேர் பாதிக்கப்பட்டதோடு 82பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 769பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 354பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.