தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால், தென்னாபிரிக்காவில் 55ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 20ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில் இதுவரை 16இலட்சத்து ஐந்தாயிரத்து 252பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 221பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 29ஆயிரத்து 362பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 15இலட்சத்து 20ஆயிரத்து 878பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.