கொடைக்கானலில் பரவி வரும் மர்ம காய்ச்சல்!

கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூக்கால், போளுர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட டமக்கள் மேற்படி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்து பொருட்கள் தற்காலிக நிவாரணத்தை தருவதாகவும், மீண்டும் சில நாட்களில் காய்ச்சல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறையின் ஆய்வினை நடத்தி வருவதுடன், அந்த பகுதியில் மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சையளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.