கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : நீதி விசாரணை வேண்டும் என பிரியங்கா காந்தி அறிவிப்பு!

கங்கை ஆற்றில் கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அங்கு நடந்தது மனிதத் தன்மையற்ற குற்றச் செயலாகும்.

மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சீர்குலைந்து தவிக்கும் நிலையில், அரசாங்கம் தனது தோற்றத்தை காப்பறிக் கொள்ளவே முயற்சிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.