இந்தியாவில் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் – வி.கே.பால்

இந்தியாவில் இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இந்திய நாட்டில் இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும். நாம் முன்னோக்கி செல்கிறபோது அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும்.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 300 கோடியாக இருக்கும். ஒகஸ்ட் முதல் டிசம்பர் வரையில் கொவிஷீல்டு தடுப்பூசியின் 75 கோடி டோஸ் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.