பயணத் தடைகள் விதிக்கப்பட்டாலும் ஆடைத் தொழிற்சாலை செயற்பாட்டிற்கு தடையில்லை

கொவிட்-19 தொற்றுக் கட்டுப்பாட்டுக்காக பயணத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆடை உயற்பத்தி விநியோகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போன்ற நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு உயிர்குமிழி முறையை பின்பற்றி செயற்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.