மண்ணுக்குள் புதைத்து மது வியாபாரம்: சிக்கிய வியாபாரி

மண்ணுக்குள் புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்த ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர் கிழக்கில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரிடமிருந்து 180 மில்லி லீற்றர் எடையுடைய 200 மதுபான போத்தல்களும், 48 மென் மதுபான தகரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் வீட்டில் வைத்து சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீட்டு வளவுக்குள் நூதனமான முறையில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 200 மதுபான போத்தல்களும், 48 மென் மதுபான தகரங்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com