படுகொலை வழக்கில் பிள்ளையானின் மறியல் நீடிப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (11) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே பிள்ளையானின் மறியலை நீடித்து, வழக்கை எதிர்வரும் ஜுலை மாதம் 27ம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com