மரை இறைச்சி தருவதாக பலரிடம் பணமோசடி செய்த நபர் சிக்கினார்

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இன்றையதினம் (27)  மரை இறைச்சி தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி சென்ற நபர் அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் சிக்கியுள்ளார்.

குறித்த நபர் முன்னரும் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மரை இறைச்சி தன்னிடம் உள்ளதாகவும் ஒருகிலோ 800 ரூபாய் என்றும் தெரிவித்து மரை இறைச்சி தருவதாக கூறி 15 ற்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பணத்தை சேகரித்து இறைச்சியினை வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை நம்பிய பலர் குறித்த நபரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தினை வழங்கியுள்ளனர்.

எனினும் நீண்ட நாளாகியும் பணத்தினை வழங்கியவர்களிற்கு இறைச்சியும் வழங்கப்படவில்லை, பணத்தினையும் கொடுக்கவில்லை. குறித்த நபர் தம்மை ஏமாற்றியுள்ளதை பின்னரே உணர்ந்தனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்குமாறு நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.