கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லண்டன் அம்புலன்ஸ் சேவை மற்றும் லண்டன் எயார் அம்புலன்ஸ் ஆகியவற்றின் துணை மருத்துவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர் மாலை 4.30 மணிக்குப் பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் உறவினருக்கு தெரிவிக்க முயற்சிகள் நடந்து வருவதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்த வழக்கை கொலை என்று கருதுவதாகவும் இதுதொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com