தேவைக்கேற்ப இலவச சோதனை கருவிகளை வழங்க ஸ்கொட்லாந்தில் அனுமதி!

கொரோன தொற்றினை கண்டறிய விரைவான கோவிட் சோதனை கருவிகள் தேவைக்கேற்ப ஸ்கொட்லாந்தில் அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் கண்டறியப்படாத நோயாளிகளை அடையாளம் காணமுடியும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டுக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும், இரண்டாவது சோதனை புறப்படும் நாளிலும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தோடு ஏப்ரல் 16 முதல் இரவு வேளைகளில் தங்க முடியாத வகையில் ஸ்கொட்லாந்து முழுவதும் பயணம் செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமையன்று ஸ்கொட்லாந்தில் மேலும் 177 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com