சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்த 4 சிறுமிகள் மாயம்!

பொலன்னறுவையில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றிலிருந்த 4 சிறுமிகள் திடீரென காணாமல் போயுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பராமரிப்பு இல்லத்தில் இருந்த 14,15,16 வயதுகளை உடைய 4 சிறுமிகள் இவ்வாறு திடீரென காணாமல் போயுள்ளனர் என்று ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஓசான் ஹேவாவித்தாரணவின் ஆலோசனையில் விசேட குழு அமைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் அவர்களை விரைவில் கண்டுபிடித்து விடலாமென பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.