நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டோர் கைது!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷ்யா முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) போராட்டங்கள் நடைபெற்றன.

தலைநகர் மாஸ்கோ, விளாடிவோஸ்டாக், சைபீரியாவின் பல நகரங்கள் மற்றும் மத்திய நகரமான விளாடிமிர் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 நகரங்களில் கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 804 பேரும், யூரல்ஸ் நகரமான உஃபாவில் 119 பேரும் உட்பட 1,782பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், மற்ற கைதிகள் போலவே நவல்னியும் நடத்தப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் கண்டனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com