தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 10 இலட்சத்து 51 ஆயிரத்து 487ஆகப் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று மட்டும் 78 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 13 ஆயிரத்து 395ஆக அதிகரித்துள்ளது.

மேலும், எட்டாயிரத்து 78 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை ஒன்பது இலட்சத்து 43 ஆயிரத்து 44 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் 95 ஆயிரத்து 48 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, தமிழ்நாட்டில் இன்று மாத்திரம் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 900 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மொத்தமாக இரண்டு கோடியே 14 இலட்சத்து இரண்டாயிரத்து 442 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.