நாடு முடக்கப்படுகிறதா? – இராணுவத் தளபதி அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வார இறுதி நாட்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாமெனவும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்கள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்காமையே இதற்கான காரணமென சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.