மியன்மாரில் கைதாகி விடுதலையான 12 இலங்கை மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

மியன்மாரில் கைதுசெய்யப்பட்டு விடுதலையான 12 இலங்கை மீனவர்களை இன்றையதினம் (23) நாட்டிற்கு அழைத்து வர வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த 12 மீனவர்களும் மியன்மாரின் யெங்கனில் இருந்து சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் சிங்கப்பூரை வந்தடைந்த பின் அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் கொழும்பை வந்தடையவுள்ளனர்.

மியன்மார் அரசுடன் முன்னெடுக்கப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 12 மீனவர்களையும் விடுதலைசெய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் மீனவர்களை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்களின் விபரங்கள்,

ஏ.சி.ஐ. பெர்னாண்டோ, எல்.ஏ நிர்மித ஸ்ரீலால், எச் எஸ் சமிந்த, எச்.எஸ் ஜயந்த, டி கே எஸ் எஸ் ஹேமசந்திர, டி எம் கே மதுஷங்க, கே எம் பெர்னாண்டோ, எஸ் நாணயக்கார, டபுள்யு என் பெர்னாண்டோ, டி கே என் பீரிஸ், ஜே கே எஸ் லால் பெரேரா மற்றும் டபுள்யு ஏ எஸ் பெர்னாண்டோ