முல்லையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் போதகர் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து தனிமைப் படுத்தப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிறைவு செய்திருக்கிறார்கள்.

அதைவிட அண்மையில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்தவர்களில் அந்தந்தப் பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 279 பேர் இங்கு வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களை பிரதேச ரீதியாகப் பார்க்கும் போது கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 27 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 143 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 14 பேரும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 39 பேரும் மாந்தைகிழக்கு பிரதேச செயலக பிரிவில் 27 பேரும் மணலாறு பிரதேச செயலக பிரிவில் 29 பேருமாக மொத்தமாக 279 பேர் தற்போது அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.