இரும்புத் தூண்களைத் திருடிய 07 பேர் கைது!

திருகோணமலை – சம்பூர் அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பிற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த இரும்புத் தூண்களைத் திருடிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் மற்றும் சம்பூர் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது நேற்று (05) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, இரும்புத்தூண்கள், மரம் வெட்ட பயன்படும் 06 சிலிண்டர்கள், கேஸ் சிலிண்டர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிய ரக லொறியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.