டி வில்லியர்ஸ்- மேக்ஸ்வெல் அதிரடி: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூர் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் 78 ஓட்டங்களையும் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் பிரசீத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணியால். 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே ரஸ்ஸல் 31 ஓட்டங்களையும் ஓய்ன் மோர்கன் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்ஸால் பட்டேல் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்;டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஏபி டிவில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com