தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்திற்குள்ளும் தீ பரவியதால் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்

தென்னாபிரிக்காவின் கேப் டவுனின் டேபிள் மவுண்டனின் சரிவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் 4 ஹெலிகொப்டரின் உதவியுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் காட்டுத் தீயானது வேகமாக பரவி அருகில் இருந்த கல்லூரி கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் கேப்டவுன் கல்லூரியின் நூலகம் தீக்கிரையாகியுள்ளதுடன், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேநேரம், தீ விபத்தில் சிக்கி இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் கரும்புகை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com